பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 101. இவரது நல்லடக்கம் சினேகனின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கரியப்பட்டியில் நாளை காலை நடைபெறுகிறது. 

Advertisment

இந்த நிலையில் சினேகனின் தந்தை மறைவிற்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், “என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் சிவசங்கு மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். 

Advertisment

தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சினிமாவைத் தவிர்த்து அரசியலிலும் பயணித்து வரும் சினேகன், 2018ஆம் ஆண்டில் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இக்கட்சி சார்பில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.