Advertisment

கமலை வியக்க வைத்த சிறுவன்

20

தக் லைஃப் படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் கமலிடம் ஒரு சிறுவன் வசனம் பேசி காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. முதலில் கமலிடம் பத்து திருக்குறளை இடைவெளி இல்லாமல் சொல்லும் அந்த சிறுவன், அடுத்ததாக சிவாஜி பேசிய பிரபல வசனமான வீர பாண்டிய கட்ட பொம்மன் வசனத்தை பேசி காண்பிக்கிறார்.

Advertisment

இடையில் அச்சிறுவன் சில வசனத்தை தவறவிட சிறுவனுக்கு கமல் எடுத்து சொல்லி மகிழ்ந்தார். மேலும் சிறுவன் முழு வசனத்தை பேசி முடித்தவுடன் சபாஷ் எனப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

child Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe