பத்திரிக்கையாளர், கவிஞர் என தொடங்கி திரைப்பட பாடலாசிரியராக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் ஒரு ஆளுமையக விளங்கியவர் கண்ணதாசன். இவரது தத்துவம் நிறைந்த பாடல் வரிகள் காலத்தால் அழியாதவையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர் மறைந்து இன்றுடன் 44 ஆண்டு ஆகிறது. இதனையொட்டி பலரும் அவரது நினைவை போற்றும் வகையில் அவர் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் எம்.பி-யுமான கமல்ஹாசன், “அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான்.
அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும். எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். என்றென்றும். உங்கள் நான்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.