மகாராஷ்டிரா அந்தேரி பகுதியில் கடந்த 18ஆம் தேதி நாலந்தா கட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக காவல் துறையினர் தடயவியல் துறை அதிகாரிகளோடு சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இரண்டு குண்டுகளை கண்டெடுத்தனர். பின்பு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் யார் இதனை அரங்கேற்றினார் என்பதை ஆராய்ந்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பின்பு குண்டுகளை வைத்து தீவிரமாக சோதனை செய்ததில் இந்தக் குண்டுகள் அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள நடிகர் கமால் கானின் வீட்டில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடந்த விசாரணையில் அந்த குண்டுகள் தன்னுடையது தான் என அவர் ஒப்புக்கொண்டார். அதாவது தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதனை சோதிக்க முயற்சித்ததாகவும் அப்போது இரண்டு முறை சுட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வீட்டிற்கு முன்பு ஒரு சதுப்பு நிலப் பகுதி இருப்பதாகவும் அது பாதுகாப்பானதால் அதை நோக்கிதான் சுட்டதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால் குண்டுகள் திசை திரும்பி அருகில் உள்ள குடியிருப்புக் கட்டிடத்தில் பாய்ந்ததாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள் அவர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்பு இந்த துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே சுடப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக கமால் கான், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் இவரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால் அவர் தற்போது காவலில் உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/18-49-2026-01-24-13-21-52.jpg)