மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆகஸ்டில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 

Advertisment

குறுகிய நாட்களிலே ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு இந்திய படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்போது மலையாளத் திரையுலகிலே அதிக வசூலித்த படமாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்படுகிறது. 

Advertisment

இப்படத்தின் ஓடிடி அப்டேட் சமீபத்தில் வெளியானது. அதாவது விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேதி வெளியிடவில்லை. இந்த நிலையில் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 31ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. பெரும் ஹிட்டடித்த இப்படத்தை ஓடிடியிலும் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.