மலையாளத் திரையுலகில் தற்போது பேசு பொருளாக இருக்கிறார் நடிகை கல்யாணி பிரயதர்ஷன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லோகா’ படம் இதுவரை எந்த ஒரு மலையாளப் படமும் வசூலிக்காத 300 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது புகழும் அதிகரித்துள்ளது. படம் வெளியான சில வாரம் கழித்து பிரபல சினிமா இணையதளமான ஐ.எம்.டி.பி இணையதளத்தில் குறிப்பிட்ட ஒரு வாரத்திற்கான இந்திய திரைப்பிரபலங்களின் பட்டியலில் ஷாருக்கானையே பின் தள்ளிவிட்டு முதல் இடத்தில் இருந்தார். 

Advertisment

இவர் தமிழில் தற்போது ரவி மோகனின் ‘ஜீனி’ மற்றும் கார்த்தியின் மார்ஷல் படத்தை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜீனி படத்தில் இருந்து முதல் பாடலாக ‘அப்தி அப்தி’ என்ற பாடல் நேற்று இரவு வெளியானது. இதில் கல்யாணி பிரயதர்ஷன் கவர்ச்சி நடனமாடியிருந்தார். இப்பாடல் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை புவனேஷ் அர்ஜூனன் என்பவர் இயக்க ரவி மோகன், கல்யாணி பிரயதர்ஷனுடன், க்ரித்தி ஷெட்டி, வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வேல்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் பாடல் தொடர்பாக கல்யாணி பிரயதர்ஷன் தனது ஆர்வத்தை பகிர்ந்துள்ளார். பாடலின் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், “ஒரு நடிகராக, நான் இதுவரை செய்யாத விஷயங்களைச் செய்ய எப்போதும் எனக்குள் நானே சவால் விடுத்து முயற்சிப்பேன். அந்த வகையில் இந்த பாடலும் ஒன்று. பாடல் பற்றி இயக்குநர் புவனேஷ் சொன்ன போது, இவ்வளவு அழகாக ஒரு கமர்ஷியல் இசையை உண்மையாகவும் படக் கதையின் முக்கியமானதாகவும் மாற்றியதை பார்த்துத் வியந்துப் போனேன். நீங்கள் அனைவரும் அதைப் படத்தில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு மிகவும் சக்திவாய்ந்த காரணங்கள் பின்னணியில் இருக்கிறது. அதற்காக மிகவும் கடினமாக உழைத்து, புதிதாக ஒன்றை முயற்சித்திருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment