தமிழ்த்திரையுலகில் பழனி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் காஜல் அகர்வால். தமிழ் மொழி மட்டுள்ளாது தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் தன் நடிப்புத் திறமையின் மூலமாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு "ஹோ கயா நா" வில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகனார். இவ்வாறு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இது சாதாரண விஷயமல்ல. எனினும் சில பயிற்சிகள் மூலமாக தனது இளமையையும், அழகையும் குறையாமல் பாதுகாத்து வருகிறார் காஜல் அகர்வால்.

Advertisment

இது குறித்து பேசிய காஜல், "எனக்கு தற்போது வயது 40 ஆகிறது. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையில் என்னிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய அறிவுறித்தினார்கள். படங்களில் பரபரப்பாக இருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய ஒருபோதும் தவறியதில்லை. ஒவ்வொரு நாளும் உடலுக்கு தேவையான உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறேன். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவேன். தேங்காய் தண்ணீர் என் அன்றாட உணவில் நிச்சயமாக இருக்கும். பழங்களில் உள்ள இயற்கையான இனிப்புகள், பச்சை காய்கறிகளில் உள்ள ஊட்டசத்துகள் மற்றும் தாவர விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் ஆகியவற்றிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. வயதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் உடற்பயிற்சியை தொடர்ந்து, தவறாமல் செய்து வருகிறேன்." என்று  கூறினார். 

Advertisment

காஜல் சொன்னது போல உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை உடல் நலத்திற்கு அவசியம் என்று மருத்துவர்கள் சொல்ல நாம் பல முறை கேட்டிருப்போம். ஆனால் அதனை நம்மில் பலரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. உடல் நலத்தை பாதுக்காக்க காய்கறிகள் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான் என்ற போதிலும், நம்மில் பலரும் அதனைக் கண்டுகொள்வதே இல்லை. இருப்பினும் நாம் பார்க்கும் பல "அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் இது போன்ற முறைகளை கையாண்டு உடல் நலத்தை பாதுகாத்து வருவதாகக் கூறி" நாம் பல முறைக்    கேட்டிருக்கிறோம். எனவே நாமும் இது போன்ற பழக்கங்களை மேற்கொள்வது நமக்கு நன்மைப் பயப்பதாக இருக்கும்.