செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘காந்தா’. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜானு சாந்தர் இசையமைத்துள்ள இப்படம் 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 12ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
Follow Us