Advertisment

“சமூகத்தை ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்” - ஜோதிகா பாராட்டு

10 (69)

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்புடன் இன்று படம் வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து ப்ரீமியர் ஷோ நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித்குமார், பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ், கே.எஸ்.ரவிகுமார், நளினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு அனைவரும் படக்குழுவினரை பாராட்டினர்.  

Advertisment

இந்த நிலையில் ஜோதிகா இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியதை பார்க்கு பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் நிச்சயம் மனதை தொடும், ஃபீல் குட் படமாக இருக்கும். அதில் முக்கியமாக முற்போக்கு படமாக இருக்கும். இயக்குநர் சிவகுமார் முருகேசன், உண்மையில் இந்த படம் உங்களுக்கு முதல் படமா? நமது சமூகத்திற்கு ஒரு முக்கியமான மெசேஜை சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் இவ்வளவு கண்ணியமான நகைச்சுவையுடனும் எளிமையுடனும். 

15 (69)உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிந்தனையும் செயல்முறையும் உங்கள் கதாபாத்திரத்தில் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன், ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமையாளருக்கு உண்மையிலேயே தகுதியான மேடையை வழங்கியதற்கு நன்றி. வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது தூய திறமையையும் உருவாக்கியதற்கு நடிகைகளின் சார்பாக நன்றி. அதே போல் பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை உங்கள் நட்சத்திர சக்தியுடன் ஆதரித்ததற்கு நன்றி.

ராதிகா சரத்குமார், நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்! மிகவும் உத்வேகம் தருகிறீர்கள்! இந்த வேடத்தில் உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தாய் கிழவி வெறும் சக்தி வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் மட்டுமல்லாமல், மிகவும் அழகானவராகவும் இருந்தார், அது உண்மையான ராதிகாவின் பிரதிபலிப்புதான். உங்களின் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், குரல் மாற்றுவது, சிரிப்பு, வசனம் மற்றும் சிறிய சைகைகள் மூலம் எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டீர்கள், இது ஒரு நடிகராக உங்களை வேறுபடுத்துகிறது. 

எனக்கு தாய் கிழவி என்பது பெண்களால் இயக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம். பெருமைப்படுங்கள் தாய் கிழவி டீம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Sivakumar Murugesan actor sivakarthikeyan jyothika radhika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe