பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். மேலும் இது குறித்து யூட்யூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல் ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்துகையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன் என விளக்கமளித்திருந்தார். பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியிருந்தார். ஆனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில் ஆஜராகியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் ஆஜாகுவதற்கு நீதிமன்றம் படியேறும் காட்சிகள் பார்ப்பவர்களை கலங்கடித்தது.
இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக பராமரிப்பு தொகையாக மாதம் 6 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/17-5-2025-10-30-13-45-21.jpg)