Advertisment

ஷூட்டிங்கில் நடந்த நெகிழ்ச்சி தருணம்; கண்கலங்கியபடி பகிர்ந்த் ஜீவா

18 (53)

ஜீவா நடிப்பில் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் என்பவர் இசையமைத்துள்ளார். ஒரு திருமணத்தின் பின்னணியில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் ஜீவா கலந்து கொண்டு பேசுகையில், “குமுளி மக்களுக்கு எங்களுடைய முதல் நன்றிறையை சொல்லிக்குறேன். அவங்க எல்லாருமே இந்த படம் நல்லா வரனும்னு சாமிய கும்புட்டு கெடா வெட்டி இருந்தாங்க. ஷூட்டிங் முடியும் போது எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. இவ்ளோ சந்தோஷமா நாங்க இருந்ததில்லன்னு அவ்ளோ மகிழ்ச்சியா சொன்னாங்க. அதை நினைக்கும் போது மனசு ரொம குளிர்ந்திருச்சு. அதுல ஒரு நடிகர், டைரக்டர பார்த்து உங்களுக்கு கோடி நன்றி, இந்த படத்தால என் புள்ளை, குட்டியெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிருவேன்னு சொன்னார்” என சற்று கண்கலங்கியபடி பேசினார். 

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், “இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் டைரக்டர் நிதிஷ் தான். நான் தமிழ் சினிமாவுல நிறைய தமிழ் டைரக்டர்ஸோட ஒர்க் பண்ணிருக்கேன். சமீபகாலமா எனக்கு ஒரு வெற்றி இல்லாம இருந்துச்சு. அதை இந்த படம் கொடுத்துருக்கு. அதுக்கு நிதிஷுக்கு நன்றி. நிறைய தமிழ் டைரக்டர்ஸ் கொடுக்காதத அவர் எனக்கு கொடுத்திருக்கார். அவருடைய டீமுக்கும் நன்றி” என்றார். 

jiiva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe