Advertisment

“நிறைய இடத்துல அழுதுட்டேன்... நல்ல ஃபீல் குட் படம்” - ஜீவா பாராட்டு

12 (10)

ஹரி குமரன் இயக்கத்தில் மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரோ ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிணறு’. இப்படத்தில் கனிஷ்குமார், விவேக் பிரசன்னா, மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புவனேஷ் செல்வணேசன் இசையமைத்துள்ள இப்படம் கிராமத்து பின்னணியில் ஒரு கிணறையும் சிறுவர்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது. இப்படம் நாளை(14.11.2025) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு காட்சி நடைபெற்றது. இதில் ஜீவா, சீனு ராமசாமி, வைபவ், வினய், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஜீவா பேசுகையில், “உண்மையிலேயே படக்குழு பயங்கரமான உழைப்பை போட்டுருக்காங்க. நல்ல ஃபீல் குட் படம். ஒரு இரானியன் படம் பார்த்த உணர்வு இருந்துச்சு. 

Advertisment

நிறைய இடத்துல எனக்கே தெரியாம அழுதுட்டேன். படத்துல நடிச்சவங்க எல்லாமே முதல் தடவை நடிச்சாலும் கேமரா கூச்சமே இல்லாம ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்த படம் எல்லாருக்குமே பிடிக்கும். குறிப்பா படத்துல ஒரு பாட்டி வராங்க, அவங்க சூப்பரா நடிச்சிருக்காங்க. இந்தப்பட டைரக்டர் தமிழ்நாட்டுல ஒரு குக் கிராமத்து வாழ்வியல ரொம்ப அழகா காமிச்சிருக்காரு.எல்லாருமே பார்க்க வேண்டிய படம், ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு என்ஜாய் பன்னேன். இயற்கை ரசிக்கிற மாதிரி இந்த சினிமா இருந்துச்சு” என்றார். 

jiiva Movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe