ஜீவா நடிப்பில் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் என்பவர் இசையமைத்துள்ளார். ஒரு திருமணத்தின் பின்னணியில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியது.
இப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென அதற்கு முன்பாக 15ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஜன நாயகன் வெளியீடை படக்குழு மேற்கோள் காட்டியிருந்தது. அதாவது பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனை ரசிகர்களோடு சேர்ந்து நாங்களும் கொண்டாட இருந்தோம், ஆனால் அது நடக்கவில்லை, அதனால் அப்படக்குழுவினருக்கு மரியாதை அளித்து நாங்கள் முன்கூட்டியே படத்தை வெளியிடுகிறோம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜீவா, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் சென்சார் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர், ஜிப்ஸி படத்தில் 48 கட் கொடுத்தாங்க. அதை முடித்து கடந்து வந்தால் கொரோனா வந்துவிட்டது. இரண்டுமே எங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது” என சிரித்துக் கொண்டே பேசினார்.
Follow Us