இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி வெளியான வெளியான திரைப்படம் "தலைவர் தம்பி தலைமையில்". ஜீவாவின் யதார்த்தமான நடிப்பில் வெளியான இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  அரசியல்  கலந்த நகைச்சுவைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களிடமும்  இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தினை நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார். இளவரசு, தம்பி ராமையா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.   

Advertisment

இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் படக்குழுவினர் சென்னையில் வெற்றி விழா கொண்டாடினர். இந்த விழாவில் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். அதே நேரத்தில், படம் வெற்றியடைந்ததைக் கொண்டாடும் விதமாக, இன்று (07-02-26) கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்குப் படம் பார்க்க வரும் அனைத்து ரசிகர்களுக்கும் பரிசளிக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி, படம் பார்க்க வரும் ஆண்களுக்கு வேட்டி சட்டையும், பெண்களுக்கு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். 

Advertisment

இவ்வாறு, திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள.  அதன் படி, வருகின்ற 12 தேதி நெட் பிளிக்ஸ் மற்றும் ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, மக்களிடம் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வரும் இப்படம், ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.