விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா தயாரிக்க தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

Advertisment

படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியானது. பின்பு கடந்த ஆண்டு மோஷன் போஸ்டர் வெளியானது. மோஷன் போஸ்டரில், ‘தடைசெய்யப்பட்ட ரகசியம்’(Forbidden Secret) என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது. அதனால் இதுவரை சொல்லப்படாத கதையை இப்படம் சொல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இடையில் சந்தீப் கிஷன் பிறந்தநாளுக்கும் ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கும் வாழ்த்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் படப்பிடிப்பின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

Advertisment

20 (12)

இதனைத் தொடர்ந்து நிதி நெருக்கடியால் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து ஜேஎஸ்ஜே என்ற தயாரிப்பு நிறுவனம் படத்தில் இணைந்தது. இந்நிறுவனம் ஜேசன் சஞ்சய்தாம். இந்த நிலையில் படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் பணக்கட்டுகள் தங்கக்கட்டிகள் குவிந்து கிடக்க அதன் மேல் உட்காந்திருக்கும் சந்தீப் கிஷன், கையில் கட்டு கட்டிக்கொண்டு முகத்தில் சில ரத்தக்கறையுடன் இடம் பெற்றிருக்கிறார்.