தமிழகத்தில் தேர்தல் வரவுள்ளதையொட்டி அனைத்துக்கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதில் விஜயின் தவெக-வும் ஒன்று, தேர்தல் பணிகள் மட்டுமல்லாது, உட்கட்சி பூசல்கள், நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய செயல்கள் போன்ற காரணங்களாலும் கட்சி பரபரப்பாக இருந்து வருகிறது. தமிழ்த் திரையில் உச்ச நடிகரான விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவர் கட்சி தொடங்கியதிலிருந்தே ஊடகம் மற்றும் மக்களிடமும் முக்கிய பேசுபொருளாக மாறினார். அரசியலில் தடம் பதித்துள்ள விஜய் இனிவரும் காலங்களில் திரையில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. இந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" படமே விஜயின் கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது.
விஜயின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. பாடல் காட்சிகளில் சில அரசியல் பேசும் வரிகள் இருப்பது, ரசிகர்களையும் தாண்டி அரசியல் வட்டத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை (27-12-25) நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மலேசிய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், இவ்விழாவில் "அரசியல் குறித்து பேசக்கடாது, கட்சி சார்ந்த கொடி, டீ-சர்ட், துண்டு போன்றவற்றை அணியக்கூடாது" போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் விழாவில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கணக்காண ரசிகர்கள் மலேசியாவிற்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/3-2025-12-26-12-20-27.jpeg)