விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. பொதுவாக சமீப காலங்களில் விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் எதாவது ஒரு வகையில் பிரச்சனை உருவாகி வருகிறது. இதனால் கடைசி நிமிடம் வரை படக்குழுவிற்கு நெருக்கடி ஏற்பட்டு பட வெளியீட்டை சுமூகமாக வெளியிடும் சூழல் அமையவில்லை. ஆனால் இப்படி வரும் தடைகளை கடைசி நேரத்தில் எப்படியாவது படக்குழு சமாளித்து அறிவித்த தேதியில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அதே போல் ஜன நாயகன் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மற்றும் இன்று நடந்துள்ளது. தணிக்கை வாரியமும் படக்குழு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதியும் தணிக்கை வாரியத்துக்கு சராமரி கேள்வி எழுப்பினார். இவ்வழக்கின் தீர்ப்பு பட வெளியீட்டு தேதியான ஜன.9ஆம் தேதி காலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில் இங்கிலாந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் உள்ள 39 ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகா, கேரளாவில் ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் படத்தின் டிக்கெட் கட்டணத்தைத் திரையரங்குகள் திருப்பி வழங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow Us