Advertisment

“தவறான தகவல்களை பரப்புகின்றனர்” - ஜானகி பேத்தி அறிக்கை

08 (25)

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா. இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். சென்னையை சேர்ந்த நடனக் கலைஞர் உமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக முரளி கிருஷ்ணாவும் உமாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர் நேற்று முன்தினம் காலமானார். இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.   

Advertisment

இந்த நிலையில் ஜானகியின் பேத்தியும் முரளி கிருஷ்ணாவின் மகளுமான அப்சரா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “என் தந்தை முரளி கிருஷ்ணா, நீண்டகால நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை 12:55 மணிக்கு மைசூரில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் உறுதிப்படுத்துகிறேன். அவர் ஒரு பாசமுள்ள மகனாக ஜானகி அவர்களுக்குத் தொடர்ச்சியான பலமாகவும் ஆதரவாகவும் இருந்தவர். மேலும் தனக்கெனத் தனித்திறமை கொண்ட ஒரு திறமையான இசைக்கலைஞரும் ஆவார். அவர் காலமான நேரத்தில் குடும்பத்தினரும் நலம் விரும்பிகளும் உடனிருந்தனர். 

Advertisment

அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன. நாங்கள் அனைவரும் அவரை இழந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறோம், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பினால் நாங்கள் துயருறும் இந்த நேரத்தில் தனியுரிமையையும் புரிதலையும் கோருகிறோம். ஜானகி அவர்கள் தனது மகனின் மறைவினால் துயருற்றாலும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளால் ஆதரிக்கப்படுகிறார். ஆனால் சில தனிநபர்கள் தீங்கிழைக்கும் வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்புகின்றனர். இதை குடும்பத்தினர் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் பொதுமக்களும் ஊடகங்களும் யூகங்களையும் சரிபார்க்கப்படாத செய்திகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளது. 

grand daughter janaki
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe