அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நேற்று முன் தினம் நடந்தது. அதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் அங்கு இசை கச்சேரியும் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்து கொண்டனர். அதனால் இந்நிகழ்வு மலேசியா சாதனை புத்தகத்தில் அதிக பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இடம் பிடித்தது.
ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. அதில் பிரச்சனைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த போல் டிக்கெட் முன்பதிவும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பத்தில், மமிதா பைஜூவை ஆர்மியில் சேர்க்க பயிற்சி கொடுக்கிறார் விஜய். ஆனால் மமிதா பைஜூ ஆர்மிக்கு பின்னாள் இருக்கும் சில சதித்திட்டங்களால் பயப்படுகிறார். இதனிடையே அவரை கொல்ல வில்லன் கும்பலான பாபி தியோல், முயற்சிக்க அவரை விஜய் காப்பாற்றி, நாட்டை அழிக்க துடிக்கும் வில்லன் கும்பலின் சதித்திட்டத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
அதற்கேற்றார் போல், “மக்களுக்கு நல்லது பன்றதுக்கு அரசியலுக்கு வாங்டான்னா... கொள்ளை அடிக்குறதுக்கும் கொலை பன்றதுக்குமாடா அரசியலுக்கு வரீங்க” என அரசியல் வாதிகளை மிரட்டும் வசனங்களும், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், “திரும்பி போற ஐடியாவே இல்ல... ஐஎம் கம்மிங்” என்ற பஞ்ச் வசனங்களும் விஜய் பேசுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/10-42-2026-01-03-19-42-33.jpg)