Advertisment

‘ஜன நாயகன்’ பட வழக்கில் திடீர் திருப்பம்!

18 (57)

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

Advertisment

இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Advertisment

மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து வழக்கின் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க தீர்ப்பு வழங்கியது. இதனால் தனிநீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்தது.  

இந்த சூழலில் வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அவர்கள் மறு ஆய்வுக்கு செல்ல ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழு மறு ஆய்வு தணிக்கை குழுவிற்கு படத்தை அனுப்பியுள்ளனர். இதனால் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி முடியும் பட்சத்தில் இம்மாதே படம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jana Nayagan actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe