அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தில் இருந்து இதுவரை ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’, ‘செல்ல மகளே’ ஆகிய பாடல்கள் வெளியாகியது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான கட்டுப்பாடுகளுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

Advertisment

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தளபதி திருவிழா என்னும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் விஜய்யின் பல்வேறு ஹிட் பாடல்கள் பாடப்பட்டது. இதில் சர்ப்ரைஸாக விஜயின் அம்மா ஷோபா சிவகாசி படத்தில் வரும் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலை பாடி அசத்தினார். இதனிடையே விஜய்யை பார்த்து ரசிகர்கள் ‘தவெக... தவெக...’ என கோஷமிட்டனர். உடனே விஜய் இங்கே வேண்டாம் என விஜய் சைகை மூலம் தெரிவித்தார். 

இந்த நிலையில் இந்நிகழ்ச்சி மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிக அளவு பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மொத்தம் 80, 000 ரசிகர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. 

Advertisment