விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யின் முழு நேர அரசியலுக்கு முன் கடைசிப் படமாக இப்படம் இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை காண இருக்கின்றனர்.
முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. பின்பு விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் கிளிம்ஸ் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. கிளிம்ஸில் விஜய் போலீஸ் அதிகாரியாக கையில் கத்தியுடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான ‘தளபதி கட்சேரி’ வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 27 ஆம் தேதி மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் ரசிகர்கள் எமோஷ்னலாக அவர்களது அன்பை தெரிவிக்கின்றனர். வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சும் குறிப்பாக அவரது குட்டி ஸ்டோரியும் சிறப்பு அம்சமாக இருக்கும். ஆனால் இப்படம் விஜய்யின் முழு நேர அரசியலுக்கு முன் கடைசி படம் என்பதால் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பேச்சைக் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/16-18-2025-11-21-18-52-38.jpg)