Advertisment

‘ஜமா’ நாயகனின் அடுத்த பட அப்டேட்!

01 (4)

ஜமா படத்தின் மூலமாகக் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தவர் பாரி இளவழகன். அறிமுகமானது மட்டுமில்லாமல் இவரே அப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. குறைந்தபட்ச 
பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் பாராட்டப்பட்டனர். குறிப்பாக, பாரியின் நடிப்பு முதல் படத்தில் நடித்ததை போன்றல்லாமல் பல படங்களில் நடித்த அனுபவம் கொண்டவரைப் போல இருந்ததாகப் பலரும் பாராட்டினர். மேலும், இவரது இயக்கமும் எந்த வித எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக அமைந்தது. இப்படியாகப் பன்முக திறமை கொண்ட இவரது படம் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், இவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.  

Advertisment

அந்த வகையில், மில்லியன் டாலர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் பாரி நடித்துள்ளார். அவரே இந்த படத்தினையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கதை, திரைக்கதை என அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்துள்ளார். இதில், ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். 

மில்லியன் டாலர் நிறுவனத்தின் ஏழாவது திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஜமா படத்தை அடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe