தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக, அவரது மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன . குறிப்பாக, இந்த விவகாரத்திற்கு ஒரு நடிகை தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியானதால், அந்த செய்தி இன்னும் பரபரப்பாக மாறியது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தாலும், யார் அந்த நடிகை என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, மனைவி விவாகரத்து கேட்டுள்ள நிலையில், ஒரு நடிகை தான் இதற்குக் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வந்துள்ள செய்திகள், மேலும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. அந்த வகையில், விஜயின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை "அன்பாலோவ்" செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, விஜயின் குடும்பத்தில் மிகப் பெரிய சிக்கல் நிலவிவருவதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த விஜய் தரப்பினர் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, விஜயின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கங்களை ஜேசன் சஞ்சய் இதுவரை பின்தொடர்ந்ததே இல்லை. ஆகையால், பின்தொடராத அவர் எப்படி அன்பாலோவ் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, இது போன்ற தகவல்கள் உண்மையானது அல்ல என்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வைத்து தந்தை மற்றும் மகனிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Follow Us