தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அவ்வப்போது அறிமுகமாகி வந்தாலும், சில நடிகர்கள் மட்டுமே உச்சம் தொடுவது என்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நடிகைகளில் சிலர் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த நடிகைகளாக மாறி வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் முதல் படத்திலேயே அனைவராலும் கவரப்பட்டவர் நடிகை சதா. அவர் நடித்த முதல் படம் ஜெயம், பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அது போக தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 

Advertisment

பல படங்களில் பரபரப்பாக நடித்து வந்த சதா, திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதற்கடுத்து பல ஆண்டுகளாக நடிப்பில் தலை காட்டாத அவர், சமீபத்தில் "டார்ச்லைட்" படத்தில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். 

Advertisment

பின்னர் போட்டோகிராபியில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதனால் புகைப்படக் கலைகராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வந்தார். இந்த நிலையில் லேசான கவர்ச்சியுடன் கூடிய தனது புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் திரையில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.