திரையுலகில் நடிகர்கள் தாங்கள் நடித்த படங்கள் வெற்றி பெறும்போது தங்களின் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த உள்ளாராம் பிரபல நடிகை ராஸ்மிகா மந்தனா. 2016 ம் ஆண்டு "கிரீக் பார்ட்டி"  என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஸ்மிகா மந்தனா. தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சமக் போன்ற கன்னட படங்களில் நடித்த ராஸ்மிகா, 2018 ம் ஆண்டு கீதா கோவிந்தம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமையவே தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகையாக மாறினார். பின்னர் புஷ்பா போன்ற படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றததைத்  தொடர்ந்து இந்திய அளவில் மிக முக்கிய நடிகையாக மாறியுள்ளார் ராஸ்மிகா. 

Advertisment

புஷ்பா படத்திற்கு பிறகு இவர் இந்திய அளவில் மிக முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் இவர் நடித்த வாரிசு, அனிமல், புஷ்பா 2 போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. காக்டெய்ல், மைசா போன்ற படங்கள் வரவுள்ள நிலையில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதுவரை 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் ராஸ்மிகா தனது சம்பளத்தை 10 கோடியாக மாற்ற திட்டமிட்டுள்ளாராம். பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் 13 கோடி வரை கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.  

Advertisment

இந்த தகவல் வெளியாகி தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு பிரபல நடிகருடன் ராஸ்மிகா திருமணம் செய்யப்போவதாக  தகவல்கள் வெளியாகி பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது தெலுங்கு நடிகர் விஜய்தேவர்கொண்டாவுடன் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்குள்ளாக இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும் தெரியவருகிறது.