மத வெறுப்பைத் தூண்டுவதாக 2023ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சையான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு இரண்டு வாரங்கள் இடைகால தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதாவது படத்தை எதிர்த்து ஸ்ரீதேவ் நம்பூதிரி கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தனி நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் அதே கேரள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இரு நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இப்படம் கேரளாவை அவமதிக்கவில்லை என்றும் படம் வெளியாகாவிட்டால் பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தனி​நீதிபதி விதித்த இடைகால தடௌ உத்தரவை இரு நீதிபதிகள் நிக்கி படத்தை வெளியிட அனுமதி அளித்தனர்.
Follow Us