இந்தியில் ராஷ்மிகா நடித்த புது படம் ‘தம்மா’. ஆதித்ய சர்போத்தர் இயக்கியுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, சத்யராஜ், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மடோக் பிலிம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சச்சின் - ஜிகர் என இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படம் நேற்று(21.10.2025) திரையரங்குகளில் வெளியானது. 

Advertisment

ஹாரர் காமெடி ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.32 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தொடுத்துள்ளது. 

Advertisment

இந்த மனு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் புதிய படங்களை சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்வதை தடுக்காவிடில் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.