மகாராஷ்டிராவில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 11வது விழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான புகழ்பெற்ற பத்ம​பாணி விருது வழங்கப்பட்டது. மேலும் பத்​ம​பாணி நினை​வுச் சின்​னம், பாராட்​டுப் பத்​திரம், ரூ.2 லட்​சம் ரொக்​கப் பரிசும் கொடுக்கப்பட்டது. அவரது கலைச் சேவையைப் பாராட்டி, 2026ஆம் ஆண்டுக்கான இந்த விருது அவருக்கு கொடுக்கப்பட்டது.
விழாவில் பேசிய இளையராஜா, “இப்போது வரை எனக்கு இசை தெரியாது. அதனால் தான் இன்னமும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். பின்பு ‘ஜனனி ஜனனி’ பாடலை பாடினார். உயரிய விருது பெற்ற அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/10-54-2026-01-30-15-24-57.jpg)