இசையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இளையராஜா தனது முதல் சிம்பொனியான ‘வேலியண்ட்’ எனும் தலைப்பில் கடந்த மார்ச்சில் லண்டனில் நடத்தினார். உலகின் மிகச் சிறந்த இசைக்​குழு​வான ராயல் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார். இது ஆசியக் கண்​டத்​தில் எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் இந்த சாதனைக்காகவும் அவரது 50 வருட திரைப்பயண நிறைவையொட்டியும் தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் தமிழகத்திலும் சிம்பொனி இசையை அதே ராயல் இசைக்குழுவுடன் அரங்கேற்ற முதலமைச்சர் சம்பந்தம் தெரிவித்ததாக இளையராஜா தெரிவித்திருந்தார். இதனால் அதனை நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே தொடர்ந்து இளையராஜா துபாயில் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்.
இந்த நிலையில் இளையராஜா தனது இரண்டாவது சிம்பொனியை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எனது அடுத்த சிம்பொனியை எழுதவுள்ளேன். அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்ஸர்ஸ் என்ற இசைக் கோர்வையையும் எழுதுகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/21/441-2025-10-21-15-15-59.jpg)