இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ எனும் தலைப்பில் உருவாவதாக 2024ஆம் ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க கமிட்டானார். கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
படப் பூஜையில் கமல், வெற்றிமாறன் என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தன. அன்று முதலே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அடுத்தடுத்து பட பணிகள் வேகமெடுக்காததால் ரசிகர்கள் இந்த படம் உருவாகுதா என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு சென்றது. இதனிடையே அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் பயணித்து கதைக்கான பல விஷயங்களை சேகரித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் சில காரணங்களால் பின் வாங்கியதாக கூறப்பட்டது. தனுஷும் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து அதில் கவனம் செலுத்தி வந்தார். அருண் மாதேஸ்வரனும் திடீரென லோகேஷ் கனகராஜை நாயகனாக வைத்து ‘டிசி’ என்ற படத்தை தொடங்கினார். இதனால் இப்படம் எந்த நிலையில் இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. ஒரு படி மேலே போய் இப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவலும் வந்தது.
இந்த நிலையில் படத்தில் இருந்து அருண் மாதேஸ்வரன் விலகுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. அதனை தற்போது படக்குழு மறுத்துள்ளது. அதாவது தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது இதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இளையராஜா பயோ-பிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதில்லை என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல் உண்மையில்லை. லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ பட வெளியீட்டை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளையராஜா பயோ பிக்கை அருண் மாதேஸ்வரன் தொடங்குவார். அடுத்ததடுத்த அப்டேட்டுகள் விரைவில் வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/15-58-2026-02-09-17-55-50.jpg)