Advertisment

முதல் முறையாக இணைந்து பாடும் இளையராஜா - யுவன்

08 (11)

மறைந்த விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடைசியாக ‘படை தலைவன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்தை சில காட்சிகளில் படக்குழு கொண்டு வந்திருந்தனர். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisment

இப்படத்தை அடுத்து ‘கொம்பு சீவி’ என்ற தலைப்பில் சண்முக பாண்டியன் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சீமராஜா படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கிளிம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. அதில் உசிலம்பட்டி பின்னணியில் இப்படம் உருவாகிவருதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் பாடல் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்பாடலில் சிறப்பம்சமாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் முதல் முறையாக இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். முதல்முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளதால் இப்பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு முன்பாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் மாமனிதன், கஸ்டடி ஆகிய படங்களில் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

shanmuga pandian yuvan shankar raja Ilaiyaraaja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe