கடைசி விவசாயி படத்தை தொடர்ந்து ‘காட்டான்’ எனும் வெப் தொடரில் இணைந்துள்ளனர் மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணி. இத்தொடரை மணிகண்டன் உருவாக்கியுள்ளார். அவருடன் இணைந்து அஜித்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

Advertisment

இத்தொடரை தயாரிப்பாளர்களில் ஒருவராக விஜய் சேதுபதி தயாரித்தும் உள்ளார். இதில் நாயகியாக ரிஷா என்பவர் நடித்துள்ளார். இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் கடந்த மாதம் நடந்த ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்வு ஒன்றில் திரையிடப்பட்டது. அப்போது இத்தொடர் வாழ்க்கை பற்றிய தத்துவத்தை சொல்லிக்கொடுக்கும் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் தலை மட்டும் இருப்பதாகவும் அதன் உடலை தேடும் பணியில் காவல் துறையினர் மற்றும் ஊர் மக்கள் இருப்பதாகவும் காட்சிகள் வருகிறது. அவர்களை காடு, கடல், ஊர் என பல இடங்களில் தேட சொல்லும் விஜய் சேதுபதி, ‘தேடுனா மட்டும் இந்த காட்டான் கிடைச்சிடுவனா’ என ட்விஸ்ட் வைக்கிறார். மேலும் ‘காட்டான நீங்க தேடுல, காட்டான் தான் உங்களை தேடி வந்திருக்கேன்’ என சொல்கிறார். அத்துடன் டீசர் முடிகிறது. வெறும் தலையை வைத்து அது பேசுவது போல் ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருக்கும் இத்தொடர் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment