அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது

Advertisment

இப்படத்தில் இருந்து இதுவரை ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’, ‘செல்ல மகளே’ ஆகிய பாடல்கள் வெளியாகியது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பேசுகையில், “என்னுடைய முதல் நாளில் இருந்து (day 1) என் கூடவே இருந்து பயணம் (டிராவல்) செய்பவர்கள் ரசிகர்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை. கிட்டத்தட்ட 30, 33 வருடங்களுக்கு மேலாக என்னுடனே நின்றுள்ளனர். என் கூடவே நின்று இருக்கிறார்கள் அதனால் தான் நான் என்ன முடிவு எடுத்தேன் என்றால் அடுத்த 30, 33 வருடங்களுக்கு அவர்களுடன் நான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். 

Advertisment

எனக்கு ஒன்னுனா தியேட்டரில் வந்து நிற்கக்கூடிய ரசிகர்களுக்காக, அவர்களுக்காக நாளைக்கு அவர்களுக்கு ஒன்று என்றால் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று நான் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த என்னுடைய ரசிகர்களுக்காக நான்  சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி என்று சொல்லிவிட்டுப் போகிறவன் கிடையாது நன்றிக் கடனை தீர்த்து விட்டுத் தான் போவேன்” எனப் பேசினார்.