தமிழில் ரஜினி நடித்த காலா மற்றும் அஜித் நடித்த வலிமை ஆகிய படங்களில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்ணியம் மற்றும் ஆன்லைன் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “பெண்ணியம் என்ற வார்த்தையை எதிர்மறையான பார்வையில் பார்க்க வேண்டியதாகிவிட்து. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ஆண்களும் பெண்களும் சம வாய்ப்புகளைப் பெற வேண்டும். ஆண்களை தாழ்த்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நாங்கள் சொல்வது அடிப்படை பொது அறிவு, அவ்வளவுதான்” என்றார்.
மேலும் இணையவழி தாக்குதல் குறுத்து பேசிய அவர், “என்னுடைய சமூக வலை​தளப் பக்​கத்​தில், சிலர், என்னுடைய பிகினி படத்​தைப் பகிருங்கள் என கேட்​கின்றனர். இது ​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. இந்த இணை​ய​வழி துன்​புறுத்​தலுக்​கும் தண்​டனை வழங்​கப்பட வேண்​டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/16-22-2025-11-26-17-23-26.jpg)