Advertisment

எப்படி மச்சி இருக்கு? - 'ஹாட்ஸ்பாட் 2 மச்' விமர்சனம்!

12

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான படம் ஹாட்ஸ்பாட். இதில் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது ஹாட்ஸ்பாட் 2 மச் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திற்கும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் அந்த வரவேற்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? 

Advertisment

முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் அறிமுக இயக்குநர் தயாரிப்பாளர் இடம் கதை சொல்ல ஆரம்பிப்பது போல் படம் ஸ்டார்ட் ஆகிறது. மொத்தம் மூன்று கதைகள். முதல் கதை இன்றைய தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் இரண்டு நட்சத்திர நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொள்கின்றனர். தன் குடும்பம் வேலை வெட்டி எதையும் கண்டு கொள்ளாதவர்கள் அந்த நடிகர்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இவர்கள் இப்படி இருக்க இவர்களின் குடும்பத்தில் இருக்கும் நபர்களை ஒரு மர்ம நபர் கடத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். அப்படி அந்த ரசிகர்களின் சொந்தங்களை உயிரோடு விடுவதென்றால் அவர்கள் வழிபடும் நடிகர்கள் இவர்களது குடும்பத்தை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை வைக்கிறார். அப்படி அந்த நடிகர்கள் தவறும் பட்சத்தில் தான் ரசிகர்களின் சொந்தங்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். இறுதியில் அவர் கொலை செய்தாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

Advertisment

இரண்டாம் கதையில் மிகவும் பிற்போக்காக இருக்கும் தம்பி ராமையா அவரது மகள் சஞ்சனா திரிவேதியை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார். அவர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் போது படு பயங்கர மாடலாக திரும்புகிறார். இதை தம்பி ராமையாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் தன் மகள் வேறு சாதிக்கார ஆணை காதலிப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் முற்போக்காக யோசிக்கும் சஞ்சனா அடுத்தடுத்து அதிரடியாக சில விஷயங்களை செய்கிறார். இதனால் தம்பி ராமையாவின் மனம் மாறியதா, இல்லையா?  

மூன்றாம் கதையாக 90 ஹிட் ஆக இருக்கும் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் காதலில் பல அடிகள் வாங்கி தோல்வி என்பதே வாடிக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு இன்றைய காலை 2கே காதலை புரிந்து கொள்ளும் நிலை இல்லை. ஒரு கட்டத்தில் டைம் டிராவலில் ஃப்யூச்சரில் இருக்கும் ஒரு பெண்ணிடம் அவர் போனில் பேசும்படி வாய்ப்பு கிடைக்கிறது. அதில் அந்தப் பெண் உடன் நன்றாக பேசி காதல் வயப்படுகிறார். இறுதியில் அந்தப் பெண்ணை அவர் சந்தித்தாரா, இல்லையா? உண்மையில் அவர் யார்? என்பதே இந்தப் படத்தில் மீதி கதை. 

ஒரே படத்தில் திரை நட்சத்திரங்கள் மேலிருக்கும் அடங்காத வெறி. வெறிபிடித்த ரசிகர்களின் இன்றைய மனப்பாங்கு. ஆடை சுதந்திரம் பெண்ணியம் பேசும் பெண். அதை எதிர்க்கும் பெற்றோர். அதே பெற்றோரை சமாதானம் செய்ய முயற்சிக்கும் பிள்ளைகள். இன்றைய கால காதலை புரிந்து கொள்ளாத அந்த கால மனநிலையில் உள்ள இளைஞன். அவனுடைய காதல் இன்றளவில் இருக்கிறதா இல்லையா. இனிவரும் காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கும் போன்றவைகளை உள்ளடக்கி சமூகத்துக்கு அவசியமான கதை அம்சங்களை கொண்டு இந்த ஹாட்ஸ்பாட் 2 படத்தை உருவாக்கி இருக்கிறார் இதன் முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். தான் சொல்ல வந்த விஷயத்தை மிகவும் விறுவிறுப்பாகவும் எந்த ஒரு இடத்தில் தொய்வில்லாமல் பரபரப்பாக கூறி ஒரு விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட ஆந்தாலஜி படமாக இந்த இரண்டாம் பாகத்தை கொடுத்து வெற்றி படமாக மாற்றி இருக்கிறார். 

இன்றைய கால ரசிகர்களையும் மனதில் வைத்து அதே சமயம் அக்கால ரசிகர்களையும் மனதில் வைத்து இருவருக்கும் தகுந்தாற்போல் தராசில் சரிசமமாக இருப்பது போன்ற யுக்தியை பயன்படுத்தி நிதானமாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் கதை கேட்டார் போல் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் பொழுது ட்ரெய்லர் கொடுத்த பரபரப்பு பின் அடங்கி படம் வெளியான பின் ஓட்டிட்டியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படம் அதற்கு ஒரு படி மேலே சென்று திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதே போல் ஓ டி டி தளங்களிலும் முந்தைய படத்தை விட நல்ல வரவேற்பை இந்த படம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே சின்ன சின்ன தொய்வு தென்பட்டாலும் அவை சிறப்பான நேர்த்தியான திரைக்கதை மூலம் மறக்கடிக்கப்பட செய்து எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. 

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, விக்னேஷ் கார்த்திக் பிருகி டா. ஆதித்யா பாஸ்கர் பவானி ஸ்ரீ ரக்சன். கே ஜே பாலசுப்பிரமணியன். சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே அவரவர்க்கு கொடுத்த வேலையை மிக மிக சிறப்பாக செய்து படத்திற்கு வழி சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலுமே தொய்வு ஏற்படாதவாறு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கதைக்கும் திரைக்கதைக்கும் ஏற்றார் போல் தனது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்து படத்தை தாங்கி பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக அனுபவ நடிகர்கள் தங்களது அனுபவம் நடிப்பை சிறப்பான முறையில் கொடுத்து படத்தை தூண் போல் காத்து இருக்கின்றனர். 

ஜெகதீஸ் ரவி ஜோசப் பால் ஒளிப்பதிவில் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியான காட்சி அமைப்புகளை நேர்த்தியாக படம் பிடித்து காட்டி கவர்ந்திருக்கின்றனர். சதீஷ் ரகுநாத் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அரங்கேறியிருக்கிறது. 

தான் சொல்ல வந்த விஷயத்தை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் இக்கால ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக விறுவிறுப்பாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் மூன்று கதைகளை சிறப்பான முறையில் கூறி அதற்குள் ஒரு சோசியல் மெசேஜையும் வைத்து அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி இந்த ஹாட்ஸ்பாட் டூ மச் படத்தை கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் விக்னேஷ் கார்த்திக். 

ஹாட்ஸ்பாட் 2 மச் - வெரி குட் மச்சி!

priya bhavani shankar web series Movie review
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe