சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படம் பிரபல சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு திரையிடப்பட்டது. 

Advertisment

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வ தேர்வில் சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. 

Advertisment

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற மற்றொரு திரைப்பட விழாவில் கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம் என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை ‘மாண்புமிகு பறை’ படத்திற்கு கிடைத்துள்ளது.