Advertisment

“மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை” - ஹனி ரோஸ் கவலை

16 (15)

தமிழில் முதல் கனவு, சிங்கம் புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக 2023ஆம் ஆண்டு வெளியான ‘ராணி’ என்ற மலையாளப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் 2022ஆம் ஆண்டு சுந்தர் சி - ஜெய் நடிப்பில் வெளியான பட்டாம் பூச்சி படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

ராணி படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இப்போது அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த ‘ரேச்சல்’ படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. மலையாளத்தை தாண்டி தமிழ், இந்தி உள்ளிட்ட மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை அனந்தினி பாலா இயக்கியுள்ளார். மஞ்சு பாதுஷா, ஷாகுல் ஹமீத், ராஜன் உள்ளிட்டோர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் இஷான் சப்ரா இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஹனி ரோஸ் மலையாள சினிமாவுக்கு நான் தேவை இல்லை என கவலையுடன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “மலையாள சினிமாவுக்கு நான் தேவையா என்று கேட்டால் அதற்கு இல்லை என்பது தான் பதில். அதில்தான் நான் ஒட்டிக்கொண்டு இருக்கிறேன். இந்தத் துறையில் நான் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இருக்கிறேன். நல்ல பாதையை அமைக்க எனக்கு நிறைய கதாபாத்திரங்கள் தேவையில்லை. வரும் கதாபாத்திரங்களில் சிறந்ததை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சினிமா என்பது என்னுடைய பெரிய ஆசை” என்றார்.

Actress malayalam cinema,
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe