நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ‘ஹோம்பவுண்ட்’(Homebound). தர்மா புரொடக்‌ஷன் தயாரித்திருந்த இப்படத்திற்கு அமித் த்ரிவேதி பாடல்களுக்கும் நரேன் சந்திரவர்கர் மற்றும் பெனடிக்ட் டெய்லர் ஆகியோர் பின்னணி இசைக்கும் இசையமைத்திருந்தனர். 

Advertisment

இப்படம் 2020ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷரத் பீர் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. அந்த கட்டுரை கரோனா காலத்தில் தேசிய காவலர்கள் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்கும் இரண்டு பால்ய நண்பர்களைப் பற்றி விவரிக்கிறது. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரீமியர் செய்யப்பட்டது. பின்பு டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகியிருந்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தன. 

Advertisment

இப்படம் அடுத்த ஆண்டு நடக்கும் 98வது ஆஸ்கர் விருதில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்திய சார்பில் போட்டியிடுகிறது. இப்போது அப்பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் இருக்கிறது. அடுத்து இறுதி செய்யப்படும் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது. நாமினேஷ் பட்டியல் அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகிறது. அதில் இப்படம் இடம் பெறுமா என இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த நிலையில் இப்படக்குழுவிற்கு எதிராக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பூஜா சாங்கொய்வாலா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், “என்னுடைய ஹோம்பவுன்ட் நாவலின் கருப்பொருளும் படத்தின் கருப்பொருளும் ஒன்று. இரண்டிலும் 2020 ஆம் ஆண்டில் கோவிட் காலகட்டத்தில் வெளியேற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி கதை விரிகிறது. இந்த படத்தை பார்த்த பிறகு தான், தயாரிப்பாளர் எனது நாவலின் தலைப்பை தவறாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்படியே பிரதி எடுத்திருப்பதை கண்டறிய முடிந்தது. நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பே தனது வழக்கறிஞர் தயாரிப்பு நிறுவனத்துக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் உரிமை மீறலை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டது. 

Advertisment

2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எனது நாவலுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளனர். இதனால் படத்தின் விநியோகத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். காப்பியடித்த காட்சிகளை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் கதை திருட்டு விவாகரத்தில் சிக்கியுள்ளது திரை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.