இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கடைசியாக ‘கடைசி உலக போர்’ படத்தை இயக்கி நடித்திருந்தார். அதோடு படத்தை தயாரித்தும் இருந்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே இரும்பு நாகரிகம் குறித்து ஒரு தொல்லியல் அகழ்வாராய்ச்சியை மையப்படுத்தி ஒரு ஆவணப் படத்தை உருவாக்கி வருகிறார். விரைவில் அதை குறித்தான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையை பொறுத்தவரை கடந்தாண்டு வைபவ் நடிப்பில் வெளியான ஆலம்பனா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் இவர் மலேசியாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில் தனது அடுத்த பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது மீசையை முறுக்கு படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி நடித்து வருவதாகவும் இதில் யூட்யூபர் ஹர்ஷத் கானும் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தின் கதை ஆதி மற்றும் ஜீவா என இரண்டு நண்பர்கள் குறித்தாக இருந்ததாகவும் இரண்டாம் பாகத்தின் கதை அதேபோல் இரண்டு நண்பர்கள் குறித்த கதை தான் எனவும் விளக்கியுள்ளார்.
இப்படத்தை சுந்தர் சி-யின் அவ்னி சினிமாஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீசைய முறுக்கு படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் ஹிப்பாப் ஆதி அறிமுகமாகியிருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Follow Us