தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 

Advertisment

இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

Advertisment

இந்த நிலையில் இசையமப்பாளர் ஆதி, தனது விருதை மறைந்த இயக்குநர் கேவி ஆனந்துக்கு சமர்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கவன் (2017) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதை வழங்கி எங்களைக் கௌரவித்த தமிழக அரசுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த அழகான அனுபவத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஜிஸ் மற்றும் அண்ணன் விஜய் சேதுபதி, சகோதரர் கபிலன் வைரமுத்து ஆகியோருக்கு நன்றி. இந்த விருதை மறைந்தும் என்றும் நினைவில் இருக்கும் இயக்குநர் கேவி ஆனந்த் அண்ணாவுக்கு சமர்பிக்கிறேன். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான கவன் படம் ஊடக பின்னணியில் பொலிடிக்கல் த்ரில்லர் படமாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் ஹிப்ஹாப் ஆதி இசையில் பாடல்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment