அறிமுக நாயகன் அறிவழகன் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ் ஹேமா நடித்துள்ள படம் ‘நெல்லை பாய்ஸ்’. இப்படத்தை இயக்கி படத்தொகுப்பு செய்துள்ளார் கமல் ஜி. ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நாயகி ஹேமா பேசுகையில், “தயாரிப்பு சங்கத்துக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நான் நிறைய படத்துக்கு ஆடிஷன் போயிருக்கேன். சீரியல் நடிகைன்னாலே சில கேட்டகிரி வச்சிருக்காங்க. அந்த கேரக்டர்ஸ் தான் கொடுக்கிறாங்க. அந்த ஒரு மனகஷ்டத்தாலே நான் சீரியல்ல ராணியா இருந்துக்கிறேன், இனிமே படமே நடிக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன். முடிவெடுத்தேன்னு சொல்வதை விட தள்ளப்பட்டேன்னு தான் சொல்லனும்.
என்னைப் பொறுத்தவரை பட ஆர்டிஸ்ட் வேற சீரியல் ஆர்ட்டிஸ்ட் வேறன்னு கிடையாது. எல்லாமே ஒரே ஆர்டிஸ்ட் தான். அதனால தயவு செஞ்சு சீரியல்ல நடிக்கிறவங்களுக்கும் படத்துல நல்ல வாய்ப்பு கொடுங்க” என்றார்.
Follow Us