Advertisment

‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸ் ரிலீஸ் அப்டேட்

17 (27)

விஞ்ஞானம் மற்றும் சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ் ‘ஹார்டிலே பேட்டரி’. இந்த சீரிஸ் ஜீ 5 வழங்குகிறது. டிசம்பர் 16 முதல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் ‘சித்’ என்ற கதாபாத்திரத்திலும் பாதினி குமார் ‘சோஃபியா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
 
இத்தொடர் பற்றி குரு லக்ஷ்மன் கூறியதாவது, “சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’  ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார். 

Advertisment

பாதினி குமார் கூறியதாவது, “சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம். தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது” என்றார். 

Advertisment
web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe