மின்னலே படம் மூலம் அறிமுகமாகி மஜ்னு, சாமி, கோவில் என பல்வேறு படங்களுக்கு ஹிட் ஆல்பம் கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் குறைவான படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
இப்போது மீண்டும் பழையபடி பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்த பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இவர் கடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு சேரில் கை கால்கள் கயிறால் கட்டியபடி மற்றும் முகமூடியால் முகம் மறைத்தப்படி உட்காந்திருக்கிறார். அவரை இரண்டு நபர்கள் முகமூடி அணிந்தபடி வந்து பார்க்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் முகமூடியை எடுக்கின்றனர். உடனே ஆச்சரியமடைந்து ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை பார்க்க அத்துடன் அந்த வீடியோ முடிகிறது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தொடர்பாக குறித்து திரை வட்டாரங்களில் கூறியதாவது, ஒரு பட புரொமோஷனுக்காக அப்படக்குழு அவரை கடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த படக்குழு யாருடைய படம் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் ஆர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், “இப்போது தான் படப்பிடிப்பு முடித்து விட்டு வந்தேன், ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய செய்தியை கேள்விப்பட்டேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதனால் அப்படக்குழு ஆர்யா நடிக்கும் படமாக இருக்குமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/17-2-2025-10-25-12-44-23.jpg)