மின்னலே படம் மூலம் அறிமுகமாகி மஜ்னு, சாமி, கோவில் என பல்வேறு படங்களுக்கு ஹிட் ஆல்பம் கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் குறைவான படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
இப்போது மீண்டும் பழையபடி பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்த பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இவர் கடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோ ஒரு பட புரொமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற தலைப்பில் ஒரு புதுப் படம் உருவாகிறது. இப்படத்தை விஜய் என்பவர் இயக்க மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி ஸ்டூடியோஸ் - டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட நாயகன், யாரையாவது அவருக்கு பிடித்துவிட்டால் உடனே கடத்தி விடும் பழக்கம் கொண்டவராக இருக்கும் நிலையில் அவருக்குஹாரிஸ் ஜெயராஜை மிகவும் பிடிப்பதால் அவரை கடத்தும்படி டைட்டில் அறிவிப்பு புரொமோ அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/03-1-2025-10-25-19-33-37.jpg)