Advertisment

“எல்லோரும் தயங்கினார்கள்... அப்போதே முடிவு செய்துவிட்டேன்” - ஹரீஷ் கல்யாண் பகிர்வு

07 (9)

ஐடிஏஏ புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘தாஷமக்கான்’. 

Advertisment

ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தின் டைட்டில் புரமோ  வீடியோ,  பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக, திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். 

Advertisment

இந்நிகழ்வினில் ஹரீஷ் கல்யாண் பேசுகையில், “முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகத்திற்கு இப்படி ஒரு விழா. தாஷமக்கான் குழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். 

ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும்” என்றார். 

harish kalyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe