Advertisment

அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளேன்” - ஜி.வி.பிரகாஷ் குமார்

04

அஜித் குமார் சாதாரண நடிகராக வந்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர். எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து இந்த அளவிற்கு உயர்வது சாதாரண விஷயமல்ல என்றும் பலரும் கூறுகின்றனர். ஆனால் அஜித் திரை நடிகர் என்பதையும் தாண்டி உலக அளவில் சாதனை படைத்த நபர் என்பது பலரும் அறிந்தது என்ற போதிலும் சிலர் அவரைப்பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு, பல ஆச்சர்யம் தரும் தகவல்களும் உள்ளன. காரணம், அஜித் நடிகர் என்பதையும் தாண்டி பைக் ரேஸர் மற்றும் கார் ரேஸர் என்பதே அவருக்கான அடையாளமாகும். 

Advertisment

நடிப்பை விட ரேஸில் தான் தனக்கு  விருப்பம் அதிகம் என பலமுறை கூறியுள்ளார் அஜித். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். 

Advertisment

அஜித்தின் இந்த கார் ரேஸ் பயணத்தை ஏ.எல்.விஜய் ஆவணப்படமாக்கி வருகிறார். மேலும் அஜித்தின் கார் ரேஸ் அணிக்கு விளம்பர படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த நிலையில் அஜித்குமாரின் ரேஸின் மீதான ஆர்வம் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தின் முன்னோட்டம் ‘ரேஸிங் என்பது நடிப்பு இல்லை அது உண்மை’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்தது.  இதில் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப் பயணம் கொண்டது முதல் கார் ரேஸிங்கில் கலந்தது வரை ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருந்தது. மேலும் பிரத்தியேகமாக ரேஸ் குறித்து அஜித் பேசும் பேட்டியும் இடம் பெற்றுருந்தது.

இந்த நிலையில் ஆவணப்படத்தின் புது முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேல் இந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. இதில் முழுக்க முழுக்க அஜித்தின் மோட்டார் ரேசிங் குறித்த குறிப்புகளும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது. இறுதியில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளேன். மாஸான மற்றும் க்ளாஸான OST, விரைவில் வருகிறது. என்னுடைய இயக்குநர் விஜய்க்கும் சுரேஷ் சந்திராவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வேலை தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இவர் இதற்கு முன்பாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ACTOR AJITHKUMAR GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe