நான்காண்டுகளுக்கு ஒருமுறை என திட்டமிட்டு 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய இளையோர் போட்டி, 2013ஆம் ஆண்டை தொடர்ந்து தர்போது மூன்றவாவது முறையாக இந்தாண்டு நடத்தப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

Advertisment

இந்த போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் மகளின் அணியில் சென்னை கண்ணகியை சேர்ந்த கார்த்திகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இறுதி போட்டியில் ஈரானிய அணியை 75 - 21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியதில் கார்த்திகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதனால் தமிழக துணை முதல்வர் உ தயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும் கார்த்திகாவிற்கு பாராட்டு தெரிவிக்கிக்கின்றனர். 

Advertisment

13 (2)

அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகோதரிகளின் அபார விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்” எனத் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளர்.