இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகராக 25 படங்களை கடந்து நடித்து வருகிறார். கடைசியாக பிளாக்மெயில் எனும் படத்தில் நடித்திருந்தார். கைவசம் அடங்காதே, இடிமுழக்கம், 13, மெண்டல் மனதில், இம்மார்ட்டல், ஹேப்பி ராஜ் உள்ளிட்ட இன்னும் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.
இதனிடையே ‘லக்கி’ எனும் தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.உதய் மகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படம் சிறப்பு சக்தியுள்ள ஒரு நாய்குட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகிறது. நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகிறது.
Follow Us