இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகராக 25 படங்களை கடந்து நடித்து வருகிறார். கடைசியாக பிளாக்மெயில் எனும் படத்தில் நடித்திருந்தார். கைவசம் அடங்காதே, இடிமுழக்கம், 13, மெண்டல் மனதில், இம்மார்ட்டல், ஹேப்பி ராஜ் உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இம்மார்ட்டல், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்கி வருகிறார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். மேலும் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் டீசரை பார்க்கையில் நாயகன் ஜிவி பிரகாஷ் நாயகி கயாடு லோகர் வீட்டில் தனியாக தனது நாட்களைக் கழிக்கிறார். இருவரும் காதலிப்பது போல் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் அந்த வீட்டில் அமானுஷ்யம் ஒன்று இருப்பதை ஜிவி பிரகாஷ் கண்டு மிரளுகிறார்.
அந்த பயத்துடன் கயாடு லோஹரிடம் ‘யாருங்க இது...பயமா இருக்குங்க’ என அரளுகிறார். அந்த அமானுஷ்யம் என்ன? அதன் பிறகு ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் டீசர் முடிகிறது. ஹாரர் கலந்த திரில்லருடன் இப்படம் உருவாகியது போல் தெரிகிறது. படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us